ஹற்றன் நகரில் நடந்த வித்தியாசமான திருட்டுச் சம்பவம்

Report Print Steephen Steephen in சமூகம்
advertisement

ஹற்றன் நகரில் சில காலமாக நடந்து வந்த வித்தியாசமான திருட்டுச் சம்பவம் ஒன்று பற்றிய தகவல் பாதுகாப்பு கெமரா மூலம் தெரியவந்துள்ளது.

ஹற்றன் நகரில் உள்ள செல்போன்களுக்கு ரீலோட் செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு 8.55 அளவில் வந்த இளைஞன், வர்த்த நிலையத்தின் ஊழியர் சற்று நேரம் வெளியில் சென்றிருந்த போது, தனியங்கி ரீலோட் இயந்திரத்தில் 500 ரூபாவுக்கு ரீலோட் செய்து விட்டு, வர்த்தக நிலையத்தில் இருக்கும் மற்றுமொரு இயந்திரத்தில் அதனை உறுதிப்படுத்தும் காட்சி பாதுகாப்பு கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

நீண்டகாலமாக தனது ரீலோட் கணக்கில் இருப்பு குறைந்து வந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

advertisement

Comments