டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய மாணவர்கள்

Report Print Kumar in சமூகம்
advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய மாணவர்கள் இன்று காலை டெங்கு நுளம்பு பெரும் இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

பாடசாலை மட்டத்தில் அதிகளவில் டெங்கு நோய் தாக்கத்திற்குட்படுவதனால் பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெரும் இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், பாடசாலை சுற்று வட்டாரத்திற்குட்ட பொது மக்களின் வீடுகள் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் சிரமதானம் இடம் பெற்றதுடன், டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பாடசாலை மாணவர்கள் பொது மக்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

மேலும், பாடசாலை மாணவர்கள் முன்னுதாரணமாக பொதுமக்களின் நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வினையும் முன்னெடுத்துள்ளனர்.

advertisement

Comments