வவுனியாவில் துப்பாக்கி ரவை, வெடித்தகுண்டின் பகுதிகள் மீட்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய வளாகத்தில் பயன்படுத்த முடியாத துப்பாக்கி வைகள், வெடித்த குண்டின் பகுதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குண்டுகள் பற்றி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் நிலத்தினை ஆழப்படுத்திபோது இவற்றினை மீட்டுள்ளனர்.

இந்த பாடசாலை யுத்த காலத்தில் இராணுவத்தின் பிரதான இராணுவ முகாமாக செயற்பட்டிருந்த நிலையில் 2000 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகளினால் இராணுவதினர் மீது செய் அல்லது செத்துமடி தாக்குதலின் போது இப்பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தது.

இந்த நியைலில் பாடசாலை ஆரம்பித்து பல ஆண்டு காலமாக செயற்பட்டு வரும் நிலையில் வகுப்பறைகளுக்கு முன்பாக அலங்கார வேலைகள் செய்வதற்காக நிலத்திணை வெட்டியபோதே பாரிய அளவிலான துப்பாக்கி ரவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குண்டு செயழிலக்கச்செய்யும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலத்தினை ஆழப்படுத்தியபோது அதனுள் இருந்து மேலுமொரு துப்பாக்கி ரவையும், வெடித்த குண்டுகளின் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments