யாழில் இளநீர்,தேங்காய் விலை அதிகரிப்பு!

Report Print Nivetha in சமூகம்

யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் என்பவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவைக்கு போதுமானதாக இளநீர் கிடைப்பதில்லை எனவும் அவற்றை வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து கொண்டு வருவதன் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளமையால் விவசாயிகள் மட்டுமன்றி வியாபாரிகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments