மாணவர்கள் கையில் கற்பூரம் கொளுத்திய ஆசிரியர்

Report Print Nivetha in சமூகம்

ஹட்டன் - பொகவந்தலாவைக்கு உட்பட்ட பாடசாலையில் மாணவி ஒருவரின் பணத்தை திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர் மாணவர்கள் கையில் கற்பூரத்தை கொளுத்தியச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது கையில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலையில் தரம் 3 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே இவ்விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, மாணவர்களின் கையில் கற்பூரம் கொளுத்திய ஆசிரியையை இடமாற்ற கோரி, பொகவந்தலாவை ரொப்கில் தோட்ட மக்கள், இன்றுக் காலை ஆரப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஹட்டன் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பாடசாலைக்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments