கிழக்கு மாகாணத்தில் 47 பேருக்கான மருந்து கலவையாளர்கள் நியமனம்

Report Print Safnee Ahamed in சமூகம்
advertisement

மருந்துகலவையாளர்கள் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 47 பேருக்கான மருந்து கலவையாளர்கள் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் 59 மருந்து கலவையாளர்களுக்கான வெற்றிடம் உள்ள போதும் நாம் கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இன்று 47 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வகையில் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்ட மருந்து கலவையாளர்களுக்கான நியமனங்களில் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய நியமனம் இரத்து செய்து இம்முறை அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ளீர்க்கப்பட்டனர்.

மருந்து கலவையாளர்கள் தங்களது கடமையை மிகநேர்த்தியான முறையில் செய்வீர்கள் எனவும் தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுடன் அவர்களின் உத்தரவுகளுக்கு அமைய உங்களுக்கு வழங்கப்படுகின்ற இடத்திற்கு ஏற்றாப்போலும் செயற்படவேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.முருகானந்தன், செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மேலதிக மாகாணப்பணிப்பாளர் லதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

advertisement

Comments