விபத்தில் 21 பேர் பலி: 37 ½ ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

போக்குவரத்து சபை சாரதி ஒருவருக்கு 37 ½ வருட சிறைத்தண்டனை விதித்து குருநாகலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி குருநாகலை கொக்கரல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தி விசாரணையின் பின்னரே இன்றைய தினம் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை சாரதி செலுத்திச் சென்ற பேருந்து பாதையை விட்டு விலகி சென்றதினாலேயே இந்த அனர்த்தம் சம்பவம் இடம்பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் 11 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்ததுடன், காயமடைந்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments