கோர விபத்தொன்றில் ஸ்தலத்திலேயே பலியான இலங்கை அகதி

Report Print Ramya in சமூகம்

இந்தியா விசாகப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டிணம் பகுதியில் வீதியோரத்தில் உள்ள விடுதி ஒன்றில் லொறி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட நால்வர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் ஏனைய மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த விபத்து இடம்பெறும் போது பேருந்துக்காக காத்திருந்த நால்வரே உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments