23 வயது யுவதியை கத்தியால் குத்த முயற்சி செய்த கடற்படைவீரர்

Report Print Vino in சமூகம்

காதல் விவகாரம் காரணமாக காதலியை கத்தியால் குத்த முயற்சி செய்த கடற்படை வீரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய குறித்த இளைஞர் அவருடைய காதலி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார், இருப்பினும் இந்த வாய்த்தர்க்கம் பெரிதாகவே உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர் இந்த கடற்படை வீரர், குறித்த 23 வயதுடைய பெண்ணை பின் தொடர்ந்து அவரை பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.

இதன் போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், அவரிடம் இருந்து 11 அங்குல அளவிலான வாளினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், இந்த கடற்படை வீரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments