குப்பைமேடு சரிவில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

Report Print Thileepan Thileepan in சமூகம்

கொழும்பு - மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

புளியடி ஆலய பரிபாலன சபை, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை இன்று (20) காலை ஏற்பாடு செய்திருந்தது.

மீதொட்டமுல்ல பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனை நடைபெற்றதுடன், தீபங்கள் மற்றும் கற்பூரம் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கலாச்சார உத்தியோகஸ்தர் இ.நித்தியானந்தம் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எஸ்.வாசன், தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் தலைவர் செ.சந்திரகுமார், அந்தணர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.


Comments