சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச்சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சைட்டம் நிறுவனம் தனியார் நிறுவனத்திலிருந்து இடை நிறுத்தி அரச கட்டுப்பாட்டு சபை மூலம் கண்காணிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று காலை அரச நிறுவனங்களின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு வாரங்களுக்கு இடையில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.