வவுனியா சிறைக்கைதியொருவர் உயிரிழப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் சிறையிலிருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கையில்,

சிறைக்கைதியான யு.நிசாந்த் எனும் 45 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று நோய்வாய்ப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என தெரிவித்தார்.

மேலும் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments