கல்முனை கண்ணகி அம்மன் ஆலய சுற்றுமதில் விசமிகளால் உடைப்பு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
advertisement

கல்முனை, கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தின் சுற்று மதில் விசமிகளால் நேற்று காலை உடைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இந்த மதில் இரண்டாவது தடவையாக தகர்க்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

சம்பவத்தையடுத்து, கல்முனை மாநகரசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கு.ஏகாம்பரம், உறுப்பினர் அ.விஜயரெத்தினம் மற்றும் சமூக சேவையாளர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இந்த நிலையில் கல்முனைப் பொலிஸார் இன்று காலை ஸ்தலத்திற்குச் சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது சமூகசேவையாளர் கருத்து தெரிவிக்கையில்,

இது திட்டமிட்டு இனமுரண்பாட்டை தோற்றுவிக்க விசமிகளால் செய்யப்பட்ட சதி வேலையாகும். இதற்குள் இரு சமூகங்களும் சிக்கிவிடக் கூடாது. அவர்கள் குளிர்காய்வதற்கு நாம் துரும்பாக இருக்கக்கூடாது.

இதற்கு முன்பும் இப்படியான துர்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது இன நல்லுறவுக்கு குந்தகமாக அமையக்கூடும்.

எனவே மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் நாம் செயற்பட வேண்டும். பொலிஸார் சட்டப்படி செயற்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது.

நேற்றுத்தான் நாம் கிழக்கு முதலமைச்சரை திருமலை சென்று சந்தித்து இன அடையாளங்களை அழித்தல், மயான சுற்றுமதில் விளையாட்டு மைதான புனரமைப்பு மற்றும் இன நல்லுறவு பற்றி எல்லாம் கலந்துயாடிவிட்டு வந்திருக்கின்றோம்.

முதலமைச்சரும் இந்த விடயத்தில் உறுதியாகவுள்ளார். ஏதாவது பிரச்சினை என்றால் தன்னோடு தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

எனவே நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒரு சிலரின் சதி முயற்சிகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. எனவே இந்த மதிலை பொலிஸாரின் பார்வைக்குப்பின்னர் நாமே அமைப்போம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மேலும், பொலிஸாரின் விசாரணையை அடுத்து ஆலய முன்பக்க மதில் மற்றும் உடைக்கப்பட்ட மதில் ஆகியவற்றினதும் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments