மரம் வீழ்ந்து இரு வீடுகள் சேதம்: மூன்று பேர் காயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
advertisement

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டிரதன் சின்ன வேவாகொல பகுதியில் நேற்று மாலை மரம் வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு சிறுமி உட்பட இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சுமார் 50 வருடத்திற்கு மேல் பழமையான இளவம் பஞ்சு மரம் வீழ்ந்ததில் மின் கம்பிகள் சேதமாகியுள்ளது. இதனால் இந்த பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறித்த வீடுகளின் பாதுகாப்பு கருதி இந்த மரத்தினை வெட்டி அகற்ற முற்பட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அனர்த்தத்தின் போது வீட்டில் உள்ளவர்கள் வெளியில் ஓடி உயிர் தப்பியுள்ளனர்.

அத்துடன், மரம் வீழ்ந்ததில் ஒரு வீடு முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் வீட்டில் இருந்த தளபாடங்களும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

advertisement

Comments