மகனின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயும் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

பெற்ற மகன் நோயினால் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் 2004 - 2005 ஆம் ஆண்டு முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்ற திறமையான மாணவரான பிரியங்கர பிரியதர்ஷன என்பவரும் அவரது தாயாருமே உயிரிழந்துள்ளனர்.

பிரியங்கர பிரியதர்ஷன கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பிரபலமான ஒருவராக காணப்பட்ட இவர் கற்கை நடவடிக்கைகளிலும் மிகவும் திறமையான ஒருவராகும்.

அவரது குடும்பத்தில் 6 சகோதரர்கள். அவர்களில் 4 பேர் ரஜரட்ட பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியவர்களாகும். பிரியங்கரவின் தாயார் தனது பிள்ளைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த முறையில் தனது வேலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பிரியங்கர திடீரென நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். எவ்வித நோய்களும் இன்றி வளர்ந்தவர் திடீரென இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டமை குறித்து தாயார் மிகவும் வேதனையுடன் காணப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் மரணமடைந்துள்ளார்.

மகனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத தாயார் நீர் உணவின்றி மகனின் பூதவுடலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த நிலையில் மகனின் உடலை பார்த்து பல முறை மயங்கி விழுந்துள்ளார்.

இதன் போது மகனின் இறுதி நடவடிக்கைகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்த போது திடீரென மகன் எழுந்திரு என தாயார் கூறியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் அவர் மயங்கி அவ்விடத்திலேயே விழுந்துள்ளார். இதன் போது அனைவரும் பல முறை ஏற்பட்ட மயக்கமாக இருக்கும் என நினைத்து எழுப்ப முற்பட்ட போது அவரும் மரணித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மகன் இல்லாத துயரம் தாங்க முடியாத தாய்க்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகன் உயிரிழக்கும் போது அவரது வயது 32 என்பது குறிப்பிடத்தக்கது.

Comments