கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் : எம்.ஏ.சுமந்திரன் உறுதி

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒருபகுதி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கேப்பாப்புலவிற்கு சென்ற அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் பொதுமக்களும் இணைந்து விடுவிக்கப்படவுள்ள ஒரு பகுதி காணிகளை பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் மக்களிடமே கையளிக்கவுள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் கே.கே.மஸ்தான் ஆகியோர் இணைந்த குழு நேற்று கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments