வீட்டில் இருந்து ஓடிய இளம் பெண் : பொலிஸாரிடம் சிக்க வைத்த மாமியார்

Report Print Steephen Steephen in சமூகம்
advertisement

இரண்டு வயது பெண் குழந்தையை வீட்டில் கைவிட்டு பிரிதொரு ஆணுடன் செல்ல முயற்சித்த இளம் பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மாடி வீட்டில் கீழ் தளத்தில் பெண்ணின் கணவனின் தாய் வசித்து வருவதுடன் மேல் மாடியில் பெண்ணும், கணவரும், பிள்ளையும் வசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிலையில், கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏணி ஒன்றின் மூலம் வீட்டில் இருந்து கீழே இறங்கிய பெண் சம்பந்தப்பட்ட ஆணுடன் சென்ற போதே பொலிஸார் கைது செய்துள்ளர்.

21 வயதான இந்த பெண்ணுக்கு இரண்டு வயது பெண் பிள்ளை இருப்பதுடன் கணவன் மீன்பிடி தொழில் செய்து வருவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு பெண்ணின் மாமியார் மேல் மாடிக்கு சென்று பார்த்த போது தனது மருமகள் வீட்டில் இருந்து ஓடியுள்ளதாக சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பெண்ணை கைது செய்த பொலிஸார், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

advertisement

Comments