அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்க விசேட திட்டம்

Report Print Ramya in சமூகம்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பது தொடர்பில் விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மாணவர்களின் முழு விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதலாம் தவணை விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கண்ணங்கரா கூறியுள்ளார்.

மேலும், கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தால் 33 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments