கல்குடாவில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று (19) அழைக்கப்பட்டிருந்தனர்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் குறித்த ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் இருவரும் கடந்த 22 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் இருவரும் நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, தாக்குதலுக்குள்ளான இரு ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பாக பொலிசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஊடவியலாளர்களை வைத்து பொலிசார் மேற்கொண்ட சட்டத்துக்கு முறனான விசாரணைகள் உட்பட பல விடயங்களில் எந்த விதமானதொரு முன்னேற்றங்களும் இதுவரைக்கும் பொலிசார் மேற்கொள்ளவில்லையென தெரிவித்தே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரு ஊடகவியலாளர்களும் மீண்டும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்திருந்தனர்.

கல்குடா கும்புமூலை வேம்பு பகுதியில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதுபானசாலை உற்பத்தி தொழிற்சாலை தொடர்பாக பல்வேறு தரப்பு மட்டுமின்றி முஸ்லிம் மக்களும் குறித்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டுமென எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments