கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

Report Print Rusath in சமூகம்

தமிழ், சிங்களப் புத்தாண்டு மற்றும் நாட்டில் பல பாகங்களிலும் எச்சரிக்கப்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக உபவேந்தர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை மற்றும் வந்தாறுமூலை வளாகங்கள், மட்டக்களப்பு மருத்துவ பீடம் மற்றும் விபுலானந்த இசை நடனக் கல்லூரி என்பன அவற்றின் சகல விதமான பீடங்களினதும் கல்வி நடவடிக்கைக்காக மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான புதிய வேந்தர் நியமனம் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என தெரிவித்த உபவேந்தர்.,

பிற்போடப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவானது புதிய வேந்தர் நியமிக்கப்பட்டதும் தாமதமின்றி இடம்பெறும் எனவும் தங்கமுத்து ஜயசிங்கம் கூறியுள்ளார்.

Comments