ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

Report Print Steephen Steephen in சமூகம்
advertisement

கம்பஹா மாவட்டம் தொம்பே - மாளிகாவத்த பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொம்பே பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹங்வெல்ல, கிரிந்திவெல பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

advertisement

Comments