இந்திய பிரதமரின் வரவேற்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நோர்வூட் பொது மைதான கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை திறப்பு விழா மற்றும் நோர்வூட் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் என்பனவற்றில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த கலந்துரையாடல் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டச் செயலாளர் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments