5500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனின் பற்கள் பலாங்கொடையில் கண்டுபிடிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

பலாங்கொடை பகுதியிலுள்ள குகையொன்றிலிருந்து 5500 வருடங்கள் பழமையான ஆதிமனிதன் மற்றும் மிருகங்களின் பற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த எச்சங்கள் நேற்று அலுகல்லென குகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என களனிப் பல்கலைக்கழக பேராசிரியரும் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பற்கள் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளினுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் அதே இடத்தில் மட்பாண்டங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

advertisement

Comments