நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி

Report Print Ramya in சமூகம்
advertisement

களனி ஆற்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இருவரையும் சிகிச்சைக்கான தொம்பே வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் பிரேத பரிசோதனைகள் தொதோம்பே ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

களனி கங்கையில் மூழ்சி இருவர் பலி

தொம்பே பொலிஸ் பிரிவில் உள்ள களனி கங்கை பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொம்பே கிரிதர கப்புகொட படித்துறையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவர்கள் மேலும் சிலருடன் இணைந்து களனி கங்கையில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளனர்.

இருவரும் காப்பாற்றப்பட்டு தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஹெய்யன்துடுவ கப்புஹேன வீதியை சேர்ந்த 29 வயதான சாமர சம்பத் சத்துரங்க, 27 வயதான நதீப் கடுபல மதுரங்க ஆகிய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தொம்பே பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி - ஸ்டீபன்

advertisement

Comments