வவுனியாவில் கட்டப்பட்ட பொது நோக்கு மண்டபம் பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் யு.என்.எச்.சி.ஆர் உத்தியோகத்தர் ஜோசப் மனயார ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
சிதம்பர நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தின் திறப்பு நிகழ்வு நேற்று நடைப்பெற்றது.
நீண்ட நாட்களாகவே சிதம்பரபுரம் முகாமாக இயங்கி வந்த இந்த பகுதி காணிகள் அங்கு தங்கியிருந்த மக்களுக்கே வழங்கப்பட்டு தற்போது சிதம்பர நகராக மாற்றப்பட்ட நிலையில் யு.என்.எச்.சி.ஆரின் நிதியுதவியுடன் இந்த பொதுக்கட்டடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அப்பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.