வவுனியா புதிய பேருந்து நிலையம் செயற்படாமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்படாமை தொடர்பாக சந்திப்பொன்று இளைஞர் குழுவொன்றுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே பேருந்து நிலையம் கடந்த மூன்று மாதங்களாக செற்படாமை தொடர்பாக இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கையில்,

மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சுகள் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

இணைந்த நேர அட்டவணையொன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் உள்ள சிக்கல் நிலையால் கடந்த 3 மாதமாக திறக்கப்படாமல் உள்ளது.

எனவே இது தொடர்பில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments