தீர்வின்றி தொடரும் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி போராட்டங்கள்

Report Print Ashik in சமூகம்

முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் 30ஆவது நாளாகவும், மறிச்சிக்கட்டி பகுதியில் முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் 26ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றன.

இதேவேளை தமது பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி தம்மை சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யக்கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் அபகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்யக் கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸிம் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி கிராம மக்களுக்கு தொடர்ந்தும் பல்வேறு தரப்பினர் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments