புகையிரதத்தில் ஏறமுற்பட்டு தவறி வீழ்ந்த இளைஞன்

Report Print Vino in சமூகம்

கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

புகையிரதத்தில் ஏறுவதற்கு முயற்சித்த போது நடைபாதைக்கும் புகையிரத்திற்கும் இடையில் தவறி விழுந்து இளைஞன் காயமடைந்துள்ளார்.

இதன் போது அருகில் இருந்தவர்களின் முயற்சியில் இளைஞன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், புகையிரதத்தினை நிறுத்துவதற்கு முன்னர் அல்லது புறப்படும் ​நேரத்தில் ஏறுவதற்கு முயற்சிக்கும் ​போது இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

எனவே, பயணிகள் இதன்போது அவதானத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments