கடவத்தையில் ஒருவர் கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

கடவத்தை, மங்கடை பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்புல்கொடை, பரக்கன்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான கலங்சூரிய ஆராச்சிகே ஜானக குமார என்பவரே இவ்வாறு நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் சம்பவத்தில் காயமடைந்து உள்ளதுடன், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸாரின் பாதுகாப்புடன் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments