மாத்தறையில் பிரித்தானியா மற்றும் சுவிஸ் பிரஜைகளின் சடலம் மீட்பு

Report Print Vethu Vethu in சமூகம்

திடீரென மரணமடைந்த வெளிநாட்டவர்கள் இருவரின் சடலங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகம பொலிஸாரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மீட்கப்பட்ட இந்த சடலங்கள் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்தை நாட்டை சேர்ந்தவர்களின் சடலங்களே இவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் தொடர்பில் மாத்தறை பொலிஸார் வெளிவிவகார அமைச்சு மற்றும் குறித்த நாடுகளின் தூதரகங்கள் ஊடாக அவர்களின் உறவினர்களிடம் அறிவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments