இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காரியாலயம் இன்று காலை வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா சந்திரகுலசிங்கம், இளைஞர் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகேசவன், மாவட்ட இளைஞர் சம்மேள மன்ற செயலாளர் ஜ.சுவானி, இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments