வவுனியாவில் 57ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் 57ஆவது நாளாக தங்களது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

கையளிக்கப்பட்ட தங்களது உறவினர்கள் தொடர்பில் பதில் அளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தங்களது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், தங்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இரண்டு மாதங்களை எட்டுகின்ற போதும் அரசாங்கம் உரிய பதிலைத் தரவில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட காத்திரமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.


Comments