காவி உடையுடன் நீதிமன்றில் முன்னிலையான முருகன்!

Report Print Murali Murali in சமூகம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் காவி உடையுடன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் முருகனிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று வேலூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன் போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட முருகன் நீதிபதியுடன் மாத்திரம் ஓரிரு வார்த்தைகளை பேசியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காவி உடையணிந்து, நீண்ட தாடியுடனும், குடுமியுடனும் முருகன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகனிடம் இருந்து கடந்த மாதம் 25ஆம் திகதி கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, அவரை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முருகனின் மனைவியான நளினி, தாயார் உள்ளிட்டவர்களுக்கும் பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments