வெளிநாட்டு மோகத்தால் பணத்தை பறிகொடுத்த மக்கள்! சந்தேகநபர் கைது

Report Print Shalini in சமூகம்

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர் கடவத்தை பிரதேசத்தில் போலியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றை நடத்திச் சென்றுள்ளார்.

விளம்பரங்களின் ஊடாக, சீசெல்ஷ் நாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றை நடத்திச் சென்றுள்ளார்.

இந்த நிறுவனத்தினூடாக தனி நபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் தமது பணத்தை பறிகொடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை குழுவினரின் நடவடிக்கைகளின் மூலமாக குறித்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மகர மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Comments