உலக புகழ்பெற்ற இலங்கையரிடம் இலஞ்சம் கோரல்

Report Print Ramya in சமூகம்

இலங்கையில் கழிவு மறுசுழற்சி செய்வதற்காக வருகைத் தந்த உலக புகழ்பெற்ற இலங்கையரிடம் இலஞ்சம் கோரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உலகின் நீண்ட முடியை கொண்டமையினால் கின்னஸ் சாதனை படைத்த சுதேஷ் என்ற இலங்கையரிடமே இவ்வாறு இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வெற்றிகரமான கழிவு மறுசுழற்சி நிறுவனத்தை நடாத்தி வரும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரின் கோரிக்கைக்கு அமைய அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

மேலும், அவர் தனது முதலீட்டிற்காக முதலீட்டு சபையில் நிதி இணைப்பினை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments