வேட்டைக்குச் சென்ற நான்கு பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஹங்குராங்கெத்த, லுல்கந்துர இஹல கோமக காட்டுக்குள் சென்ற நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்த சந்தேகநபர்களிடம் இருந்து குழல் துப்பாக்கி மற்றும் 12 தோட்டக்களையும் ஹங்குராங்கெத்த பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தெல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Comments