54 ஆவது நாளாகத் தொடரும் அம்பாறை பட்டதாரிகளின் போராட்டம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அரசதொழில் கோரிய சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 54ஆவது நாளாகத் தொடர்ந்துள்ளது.

குறித்த போராட்டத்தில் பட்டதாரிகளின் தலைவர் உட்பட பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், நாளை வித்தியாசமான பரிமாணத்துடன் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசதொழில் கிடைக்கும் வரை இடைவிடாது எமது போராட்டம் தொடரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments