கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப்பெண் பரிதாபமாக மரணம்

Report Print Suman Suman in சமூகம்
advertisement

கிளிநொச்சியில் சமுர்த்திக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிராமத்தில் சமுர்த்திக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்

அவரது உறவினர்களும் அயலவர்களும் அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிர் பிரிந்துவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கர்ப்பிணியாக இருப்பதால் சட்டவைத்திய விசேட நிபுணர் பிரேதபரிசோதனையை மேற்கொள்வது அவசியம் எனவும், தற்போது இவரது உடல் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

advertisement

Comments