கிளிநொச்சி அக்கராயனில் குடிநீர் வழங்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Suman Suman in சமூகம்
advertisement

கிளிநொச்சி அக்கராயனில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர்த் திட்டத்தினை தமது பகுதிகளுக்கும் விநியோகிக்குமாறு கோரி பேரணியொன்று மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று அக்கராயன் மகா வித்தியாலயம் முன்பாக உள்ள நீர்த்தாங்கி முன்பு இருந்து ஆரம்பிக்கப்பட்டு அக்கராயன் கிராம அலுவலர் அலுவலகம் வரை சென்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அக்கராயனில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அக்கராயன் சுபாஸ் குடியிருப்பு, அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு பின்பகுதியில் உள்ள அறுபது வரையான குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டகாரர்கள்,

சுபாஸ் குடியிருப்பு அக்கராயன் வைகறை முன்பள்ளி அருகிலான சுமார் நான்கு

திறந்த பொதுக்கிணறுகள் மற்றும் பத்து வரையான பயன்படுத்த முடியாதுள்ள குழாய்க்கிணறுகள் என்பவற்றை பயன்பாட்டிற்குரிய வகையில் மாற்ற வேண்டும்.

மற்றும் தமது நெருக்கடியினை கிராம அலுவலர் மூலமாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கிராம அலுவலரிடம் வலியுறுத்தினர்.

இதேவேளை அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக அக்கராயன் மத்தியில் காணப்படுகின்ற குடிநீர் நெருக்கடியினைத் தீர்ப்பதற்கு மக்களின் ஒத்துழைப்புடன் வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கிராம அலுவலர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும் அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் 433 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளை மேற்கொள்ளும் வேலையையும் விரைவுபடுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

advertisement

Comments