நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாகாணசபை உறுப்பினருக்கு நோட்டீஸ்!

Report Print Ramya in சமூகம்

கொழும்பு பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக சில இடங்களில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 19ஆம் திகதி பிலியந்தலை, கரடியான பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

குறித்த ஆறு பேரில் மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் ஒன்று சேர்கின்ற திண்மக் கழிவுகளை பிலியந்தலை, கரடியான பிரதேசத்தில் உள்ள குப்பை கூடத்தில் கொட்டுவதற்கு கடந்த 17 ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கடந்த 19ஆம் திகதி பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனால், மேல் மாகாணசபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 24ம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

advertisement

Comments