இலங்கை புகலிட கோரிக்கையாளரின் அநாகரீகம்! ஒருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்
advertisement

இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் தமிழகம், வேலூர் அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக "தி டைம்ஸ் ஒப் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது.

29 வயதான எம்.சங்கர் என்ற இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் வனஜாபேட் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அவருடைய நண்பர்களும் இணைந்து, அந்த பகுதியில் மணல் அகல்வில் ஈடுபட்டுள்ள மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மணல் ஏற்றவரும் லொறி சாரதிகளிடம் பணம் கோரி அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த இலங்கை புகலிட கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement

Comments