யாழில் மின்சாரப் பட்டியல், கடிதங்களால் அகப்பட்ட குடும்பங்கள்!

Report Print Vino in சமூகம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள வீதியில் குப்பைகளை கொட்டிய பலர் குப்பைகளில் இருந்த கடிதங்கள் மற்றும் மின்சார பட்டியல் மூலம் அகப்பட்டுள்ளனர்.

கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவதாக சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இடத்திற்கு வந்த சுகாதார பிரிவினர் மற்றும் நெல்லியடி பொலிஸார், சோதனை நடத்தியிருந்தனர். இதன் போது மின்சாரப்பட்டியல்கள் மற்றும் கடிதங்கள் பல மீட்கப்பட்டன.

இதன் அடிப்படையில், மேற்கொண்ட விசாரணைகளின் போது 37 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Comments