கொட்டும் மழையிலும் வெள்ளவத்தையில் மீட்புப்பணிகள் தீவிரம்! பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது கொழும்பில் இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை பெய்கின்றது. இந்த நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை, சாலிமன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தினால் கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments