இலங்கை சென்ற ஜேர்மன் தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்! பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை சென்ற ஜேர்மன் தம்பதி ஒன்று தவறவிடப்பட்ட பணப் பை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை விகாரைக்கு அருகில் விழுந்து கிடந்த பணப்பையை விசேட அதிரடி படை முகாமின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

ஏ.ம்.லால் திஸாநாயக்க என்ற பொலிஸ் அதிகாரி பணப்பை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கிகோலஸ் நொப்ஸ் மற்றும் அவரது மனைவி நேற்று மாலை தம்புள்ளை பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதில் தமது வங்கி கணக்கு அட்டை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணத்துடனான பை எங்கோ விழுந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு தொலைப்பேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது. அந்த அழைப்பில் பண பையை மீட்ட பொலிஸ் அதிகாரியே உரையாடியுள்ளார்.

தனக்கு பணத்துடனான பை ஒன்று கிடைத்ததமாகவும், உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர்களை கண்டுபிடித்து இதனை ஒப்படைத்து விடுமாறும் அவர் பொலிஸ் தலைமையக அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உரிமையாளர் தனது அருகில் இருப்பதாக கூறிய பொலிஸ் தலைமை அதிகாரி, பண பையை மீட்ட அதிகாரி நிற்கும் இடத்திற்கு ஜீப் வண்டி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வெளிநாட்டவரின் 70000 ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டு பணம் உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் ஜேர்மன் நாட்டவர் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

பொலிஸ் நிலையம் வந்த அதிகாரி, உரியவர்களிடம் பணப்பை ஒப்படைத்தார். இதற்கு ஜேர்மன் தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜேர்மன் பிரஜை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, உலகளாவிய நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Comments