தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர்

Report Print Kumar in சமூகம்
advertisement

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகம் வைத்த நம்பிக்கை இன்று கேள்விக் குறியாகியுள்ளதாகவும் நம்பிக்கையிழந்த நிலையில் சிறுபான்மை சமூகம் உள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மன்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுநூலகத் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மன்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஸ்ணப்பிள்ளை துரைசாசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நூலகம் கிழக்கு மாகாண சபையின் நெல்சிப் திட்டத்தின் கீழ் ஒன்றரைக்கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மன்முனைப்பற்றின் ஆரையம்பதி பிரதேசத்தில் நீண்டகால குறையாக இருந்த குறித்த பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர்.

இரு மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள குறித்த நூலகம் மாணவர்கள் பகுதி, பத்திரிகை பகுதி, நூலக பகுதி, சிறுவர்களுக்கான பகுதி மற்றும் பெரியவர்களுக்கான பகுதி என சகல பிரிவினரும் நன்மை பெரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைசாசசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், சிப்லி பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

உச்சக்கட்ட அதிகார பகிர்வை இரண்டு சமூகங்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய தேவையுள்ளது.

இன்று இரு இனங்களும் இணைந்து செல்ல வேண்டிய தேவை உணர்த்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பாடங்களில் இருந்து கற்றுக் கொண்டவையினைக் கொண்டு சரியான பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

advertisement

இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டபோது நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்குள் சரியான தீர்வுத்திட்டம் வரும் என்று எதிர்பார்த்து நின்றோம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஆனால் சிறுபான்மை சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கு முன்பிருந்த நம்பிக்கைகூட இழந்துவிட்டது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக உண்மையான அதிகாரப்பகிர்வு வருமா என்பது இன்று கேள்விக்குறியாகவுள்ளது.

முன்பிருந்த அரசாங்கத்தில் எல்லா விடயங்களும் எவ்வாறு கேள்விக்குறியானதாக இருந்ததோ அதே நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.

அவற்றினை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது.

நாங்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தநிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம்.

விட்டுக்கொடுப்புகளை செய்து அதியுட்ச அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதில் நம்பிக்கை கொண்டு செயற்படுவதற்கான முடிவினை அரசியல் தலைவர்கள் எடுத்துள்ளார்கள்.

அதியுட்ச அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு இனங்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது. அவ்வாறு செயற்படும்போது உச்சபட்ச அதிகார பகிர்வினைப்பெற முடியும்.

அதனைப்பெற்று இரண்டு சமூகங்களும் விட்டுக்கொடுப்புகளைச் செய்து அதனை பகிர்ந்து கொள்வதில் எந்த முரண்பாடுகளும் எங்களுக்குள் வராது என நாங்கள் நம்புகின்றோம் என முதலைமைச்சர் இதன்போது தொடர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வின் போது ஓய்வுபெற்ற இரண்டு நூலகர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments