யோசித்தவின் பாட்டி தொடர்பில் சட்டமா அதிபருடன் ஆலோசனை

Report Print Ajith Ajith in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவின் பாட்டியான டெய்ஸி போர்ரெஸ்ட் (89) மீது எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இதனை அறிவித்தது.

பணச்சலவை சட்டத்தின்கீழ் போர்ரெஸ்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

யோசித்த ராஜபக்ச, ரத்மலானை பகுதியில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் 36 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுடன் கூடிய காணி தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

சந்தேகநபர் சார்பில் இன்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்த வீரசிங்ஹ ஆஜரானார்.

Comments