லஹிருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகரவுக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியமை தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது லஹிரு ஆஜராகாமை காரணமாகவே அவர் மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் வழக்கு ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments