சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டமும் சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதியும் திறந்து வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
advertisement

வவுனியா சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம் மற்றும் சந்தைப்படுத்தல் கட்டடத்தொகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை கிராமம் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அந்த வகையிலேயே ஓமந்தை பகுதி பயனாளிகளுக்காக சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதிகளும் 40 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார கப்புகின்ன, சமுர்த்தி பணிப்பாளர்களான அனுரகுனசேகர வென்னப்புலி, கே.கே.எல்.சந்திர திலக, சி.டி.களுஆராச்சி, ஜே.கே.பத்மசிறீ, ரி.என்.சஞ்சிவ்வாணி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

advertisement

Comments