வெள்ளவத்தை கட்டடம் இடிந்து விழும் சி.சி.ரீ.வி காணொளி வெளியாகியது

Report Print Thayalan Thayalan in சமூகம்

கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பான சி.சி.ரீ.வி. காணொளி வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்குப் பின்புறமாக அமைந்துள்ள தி என்சலன்ஸ் என்ற 5 மாடிக் கட்டடம் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் இடிந்து விழுந்தது.

விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 14 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் ஏனைய 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றைய தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Comments