வாகரையில் பெரேயா ஜெப வீடு திருச்சபை திறந்து வைப்பு

Report Print Navoj in சமூகம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணியில் பெரேயா ஜெப வீடு திருச்சபை இன்று திறந்து வைக்கப்பட்டது.

திருச்சபையின் போதகர் ந.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஜெப ஆராதனையினை மட்டக்களப்பு சீயோன் திருச்சபை போதகர் றொசான் மகேசன், தேவ செய்தியினை யேசு விடுவிக்கின்றார் ஊழியர்களின் ஸ்தாபகர் சகோ.மோகன் சி.லாசரஸ் ஆகியோர் நடத்தியிருந்தனர்.

இதன்போது பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், இயேசு விடுவிக்கின்றார் ஊழியர்களின் ஸ்தாபகர் சகோ.மோகன் சி.லாசரஸ், வாகரை பிரதேச செயலாளார் ஆர்.இராகுலநாயகி ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவட்ட போதகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.